2025 நவம்பர் 05, புதன்கிழமை

கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு ‘சராசரியாக 74 பேர் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் முழுவதும் நாளொன்றுக்கு சராசரியாக 74 சிறுவர், பெண்கள், ஆண்கள் கொல்லப்பட்டதாக பிரித்தானிய ஒளிபரப்பு நிறுனம் (பி.பி.சி), தனது இணையத்தளத்தில் இன்று (17) செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டு கால யுத்தத்துக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறுவது குறித்த ஐக்கிய அமெரிக்காவின் பேரம்பேசல்கள் முறிவடைந்த நிலையில் கட்டுப்படுத்த முடியாத வன்முறையானது ஏறத்தாழ ஆப்கானிஸ்தான் முழுதையும் பாதித்துள்ளது.

பாதுகாப்புச் சம்பவங்கள் 611-இல் 2,307 பேர் இறந்ததாக தாங்கள் உறுத்திப்படுத்துவதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. பெரும்பாலான கொல்லப்பட்டோர் மோதல்களில் ஈடுபட்டவர்கள் ஆவர். இதில் எதிர்பார்க்கப்பட்டதையும் விட அதிக தலிபான் ஆயுததாரிகள் உள்ளடங்குகின்ற நிலையில், கொல்லப்பட்டதில் ஐந்திலொரு பங்கினர் பொதுமக்கள் ஆவர். இதேவேளை, 1,948 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பி.பி.சியால் குறிப்பிடப்பட்டுள்ள இறந்தோரின் எண்ணிக்கையின் நம்பிக்கையை தலிபானும், ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் கேள்விக்குட்படுத்தியுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X