Editorial / 2018 நவம்பர் 01 , மு.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு அருகில், 189 பேருடன் கடலில் மூழ்கிய விமானத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றன எனக் கருதப்படும் சமிக்ஞைகளை, மீட்புப் பணியாளர்கள் பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கும் இந்தோனேஷிய அதிகாரிகள், அவ்விடத்துக்கு நீர்மூழ்கி வீரர்களை அனுப்பியுள்ளனர்.
தலைநகர் ஜகார்த்தாவுக்குக் கிழக்காக இருந்து, இச்சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.
இது தொடர்பில் நேற்று (31) கருத்துத் தெரிவித்த, இந்தோனேஷியாவின் இராணுவப் பிரதானி, விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என நம்புவதாகத் தெரிவித்ததோடு, தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலையில், இந்தச் சமிக்ஞைகளை, 35 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடித்தாகத் தெரிவித்த அதிகாரிகள், நேற்றுக் காலை முதல், மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், விமானத்தில் பயணித்த அனைவருமே கொல்லப்பட்டு விட்டனர் என்றே கருதப்படுகிறது. இதுவரையில், விமானச் சிதைவுகளும் உடற்பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளுக்குப் புறம்பாக, விபத்துக்கான காரணங்கள் குறித்தும் ஆராயப்படுகிறது. விமானம் புறப்பட்டுச் சில நிமிடங்களிலேயே, மீண்டும் தரையிறங்குவதற்கான அனுமதியை, விமானி ஏன் கோரினார் என்பதே, இப்போதுள்ள பிரதானமான கேள்வியாக அமைந்துள்ளது.
8 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
33 minute ago