2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடலுக்கு அடியிலும் கூகுள்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூ யோர்க்கில் இருந்து பிரித்தானியா  மற்றும் ஸ்பெயின் வரை, கடலுக்கு அடியில், 3,900 மைல் நீளமுள்ள கிரேஸ் ஹொப்பர்( Grace Hopper) இன்டர்நெட் கேபிள் போடும் பணியை கூகுள் நிறுவனம் நிறைவு செய்துள்ளது. இத்திட்டத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிவித்தது.

நியூயோர்க்கில் இருந்து ஆரம்பிக்கும் இக் கேபிளின் மறு முனை பிரித்தானியாவின் மேற்குக் கடற்கரையான கார்ன்வெல்லில் தரையைத் தொட்டது. ஜூலை மாதம் நிறைவடைய வேண்டிய இப் பணி சற்று தாமதமாகி உள்ளது, கேபிளின் மற்றொரு முனை ஏற்கனவே ஸ்பெயினின்  பில்பாவோ நகரில் கரையை தொட்டுள்ளது.

இதன் மூலம் வினாடிக்கு 340 முதல் 350 டெராபைட்ஸ் டேட்டாக்களை கொண்டு செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர் ஒரே நேரத்தில் 4000 வீடியோக்களைக் காண்பதற்கான டேட்டா பரிமாற்றம் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .