2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘கடும்போக்கு’ முஸ்லிம்கள் மீண்டும் இலக்குவைப்பு

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் மேற்குப் பிராந்தியமான ஸின்ஜியாங்கில், முஸ்லிம்கள் இலக்குவைக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதே நிலைப்பாட்டை, அப்பிராந்தியம் வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, “தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றால் நச்சாக்கப்பட்டோர்”, வெளிநாட்டின் பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புகளைக் கொண்டோர், பழைமைவாத இஸ்லாமிய முறையில் செயற்படுவோர் ஆகியோர், அதிகாரிகளிடம் சரணடைய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்நடவடிக்கை, சர்வதேச மட்டத்தில் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X