2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கண்களை கட்டி கின்னஸ் சாதனை

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவை சேர்ந்த 10 வயதான புனிதமலர் ராஜசேகர், தன்னுடைய இரண்டு கண்களையும் முழுமையாக கட்டிக்கொண்டு செஸ் காய்களை எந்தவித தவறும் இன்றி சரியாக செஸ் பலகையில் 45.72 நொடிகளில் அடுக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இதன்மூலம் கண்களைக் கட்டிக் கொண்டே அதிவேகமாக செஸ் பலகையை செட் செய்தவர் என்பதற்கான உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அச்சிறுமி படிக்கும் பள்ளியிலேயே இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைப் பற்றி பேசிய சிறுமி, தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து தினசரி   செஸ் விளையாடுவேன் என்று கூறினார் . மேலும் இந்த உலக சாதனை செய்தது தன்னுடைய வாழ்வில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X