2026 மார்ச் 25, புதன்கிழமை

கத்தி முனையில், மகனிடம் கொள்ளை: தந்தை கைது

Ilango Bharathy   / 2023 மார்ச் 13 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்கொட்லாந்தில், கத்தி முனையில் தனது மகன் எனத் தெரியாமல் சிறுவனிடம், நபர் ஒருவர் பணம் பறிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினத்தன்று 17 வயதான சிறுவனொருவன் ATM மையத்தில் பணம் எடுத்துக்கொண்டு இருந்துள்ளான். இதன்போது  திடீரென அங்கு வந்த  முகமூடி அணிந்த நபர், குறித்த சிறுவனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது குரலை வைத்து தந்தையை அடையாளம் கண்ட சிறுவன், முகத்தை மறைக்கும் வண்ணம் அணிந்திருந்த கழுத்து குட்டையை இறக்கியுள்ளான்.

இதன்போது தனது மகனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குறித்த நபர், தனது செயலுக்காக மகனிடம் மன்னிப்புத் தெரிவித்துள்ளார். எனினும் அவ்விடத்தை விட்டுத் தப்பிச்சென்ற சிறுவன், குடும்பத்தாரிடமும், பொலிஸாரிடமும் இதுகுறித்து புகாரளித்துள்ளான்.

இந்நிலையில் கைதான தந்தைக்கு 26 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .