Freelancer / 2024 ஜூலை 25 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனடாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறு என கனடா இந்து எம்.பி.,க்கு காலிஸ்தான் ஆதரவாளரான குர்பத்வந்த்சிங் பன்னூன் மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று கனடாவில் எட்மன்டன் நகரில் உள்ள பி.ஏ.பி.எஸ்., சுவாமிநாராயண் கோயிலில் சுவற்றில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் சில எழுதப்பட்டிருந்தன. இந்த நாசவேலையை காலிஸ்தான் ஆதரவு சீக்கிய அமைப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் காலிஸ்தான் ஆதரவு பெற்ற நீதிக்கான சீக்கியர்கள் என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், வீடியோ ஒன்றை வெளியிட்டு கனடா இந்து எம்.பி., சந்திர ஆர்யா என்பவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
அதில், “காலிஸ்தான் தனிநாடு தொடர்பாக கனடாவில் பொது வாக்கெடுப்பு வரும் 28ஆம் திகதி நடக்கிறது. அதற்கு முன்பாக கனடாவை விட்டு உனது குடும்பம் மற்றும் ஆதரவாளர்களுடன் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லையேல் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என மிரட்டியுள்ளார்.S
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago