2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை.. அதிர்ச்சி செய்தி

Editorial   / 2024 மார்ச் 08 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடா தலைநகர் ஒட்டாவா பகுதியில் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் இரண்டு மாத சிசு ஒன்று உள்ளிட்ட நான்கு குழந்தைகள் அடங்குவதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கனடாவிற்கு புதிதாக வருகைத் தந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு உயர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ள அதேவேளை, தந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குறித்த குடும்பத்துடன் நெருங்கிய ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 19 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரும் இலங்கையர் என தெரிவிக்கப்படுகின்றது.

35 வயதான தர்ஷினி திலந்திகா ஏக்கநாயக்க, அவரது 7 வயதாக குழந்தை இனுக்கா விக்ரமசிங்க, 4 வயதாக அஸ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரியானா விக்ரமசிங்க மற்றும் 2 மாத சிசுவான கேலி விக்ரமசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறித்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணிய 40 வயதான காமினி அமரகோன் என்ற நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

முன்னதாக இது துப்பாக்கிச்சூடு என அறிவிக்கப்பட்ட போதும், பின்னர் இது கொலை என அறிவிக்கப்பட்டது. மேலும் இதனால் பொது பாதுகாப்புக்கு பாதிப்பு இல்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X