Editorial / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர் கனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழியை எதிர்த்து பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட்டார். அத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றார். கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை செளந்தரராஜன் மனு தாக்கல் செய்து இருந்தார்.
கனிமொழியின் வேட்பு மனுவில் குளறுபடிகள் இருந்ததாகவும் அதனை சுட்டிக்காட்டிய பின்னரும் கூட தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை என்று தனது மனுவில் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை திரும்பப் பெறுவதாக தமிழிசை செளந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால், வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று தமிழிசை செளந்தரராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய அழைப்பாணையை அரசிதழில் வெளியிட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 14ஆம் திகதிக்கு தள்ளிவைத்தது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago