2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

“கமலா ஹாரிஸை விடவும் நான் தான் அழகு” -டிரம்ப்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

'கமலா ஹாரிஸை விட நான் தான் அழகாக இருக்கிறேன்” என்று, முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கூறியிருப்பது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், நவ., 5இல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், சர்ச்சைகளின் நாயகனான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் தோற்றுப்போய், தன் ஆதரவாளர்களை விட்டு கலவரம் செய்தது, ஆபாச பட நடிகை வாயடைக்க பணம் கொடுத்து விட்டு, போலிக்கணக்கு எழுதியது என அவர் மீதான சர்ச்சைகள் ஏராளம்.

அவரை எதிர்த்து, இந்த தேர்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளார். 'அவரை எளிதில் வெற்றி கொள்வேன்' என தம்பட்டம் அடிக்கும் டிரம்ப், கமலாவை தாறுமாறாக விமர்சனம் செய்கிறார். 'இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப் படுத்துகிறார்” என்றும் கமலா பற்றி டிரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில், கமலா ஹாரிசின் தோற்றத்தையும், புத்திசாலித்தனத்தையும் கடுமையாக சாடியுள்ளார்.

அவர் பேசுகையில், “நான் அவரை விட அழகாக இருக்கிறேன். நான் கமலாவை விட நல்ல லுக்காக இருக்கிறேன். எனக்கு இருக்கும் அழகுக்கும், அறிவுக்கும் இவரை எதிர்த்து போட்டியிட வேண்டியிருக்கிறது.

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு என்ன ஆனது? நான் அவரை எதிர்த்து களத்தில் இருக்கிறேன். ஆனால் பைடன் விலகிவிட்டார். இப்போது வேறு ஒருவருக்கு எதிராக போட்டியிடுகிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X