Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூலை 23 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸ் தனது தேர்தல் பணிக்காக நிதி திரட்ட தொடங்கியதாகவும் முதல் 24 மணி நேரத்தில் கோடிக்கணக்கில் நன்கொடை குவிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்த நிலையில் அதன் பின் அவர் திடீரென போட்டியில் இருந்து விலகினார். இதனை அடுத்து ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் 24 மணி நேரத்தில் மட்டும் அந்த கட்சிக்கு 677.6 கோடி ரூபாய் நன்கொடை குவிந்துள்ளதாகவும் இதற்கு முன் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டபோது மிகக் குறைந்த அளவு தான் நன்கொடை வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மிக குறுகிய காலத்தில் மிக அதிக அளவில் நன்கொடை குவிந்திருப்பதை பார்க்கும்போது கமலா ஹாரிஸ் அவர்களுக்கு மக்கள் மத்தியில் மட்டுமின்றி தொழில் அதிபர்களின் மத்தியிலும் மிகப்பெரிய ஆதரவு இருப்பதாக தெரிய வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றில் முதல் 24 மணி நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை ஒரே நாளில் குவிந்தது இதுதான் முதல் முறை என்று கூறப்படும் நிலையில் கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.S
23 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
2 hours ago