Editorial / 2018 மே 30 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட அயர்லாந்தில் காணப்படும் மிகவும் இறுக்கமான கருக்கலைப்பு விதிகளைத் தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பல நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அந்நாட்டின் தலைநகர் பெல்ஃபாஸ்டில் ஒன்றுகூடி அழுத்தத்தை வழங்கியுள்ளனர். வட அயர்லாந்துக்கு அயல் நாடான அயர்லாந்தில், கருக்கலைப்புத் தெரிவுக்கான உரிமைகள், கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குள் காணப்படும் வட அயர்லாந்தில், பிரதமர் தெரேசா மே-க்கும் அந்நாட்டின் பிரதான கட்சிக்கும், தமது எதிர்ப்பை, ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.
அயர்லாந்தின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாகக் காணப்படுகின்ற பகுதிகளில், வட அயர்லாந்தில் மாத்திரமே, கடுமையான கருக்கலைப்பு விதிகள் காணப்படுகின்றன. அயர்லாந்தின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, அச்சட்டங்களை மாற்ற வேண்டுமெனக் கோரிக்கைகள் எழுந்தாலும், அச்சட்டங்களை மாற்ற வேண்டுமெனவும் மாற்றக் கூடாது எனவும், ஐ.இராச்சியத்தின் அமைச்சரவைக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து, வட அயர்லாந்தின் சட்டங்களை மாற்றுவது தொடர்பான முடிவு, அப்பிராந்தியத்துக்கான அரசாங்கத்தாலேயே எடுக்கப்பட வேண்டுமென, வட அயர்லாந்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இந்நிலையிலேயே, நேற்று முன்தினம் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இவ்விடயத்தில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென, தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஐ.இராச்சியத்தில், பழைமைவாதக் கட்சியுடன், வட அயர்லாந்தின் ஜனநாயக ஒன்றியக் கட்சி இணைந்தே ஆட்சியமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜனநாயக ஒன்றியக் கட்சி, கருக்கலைப்பு விதிகளைத் தளர்த்துவதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. எனவே தான், அக்கட்சியில் தங்கியுள்ள பிரதமர் மே, இவ்விடயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு முடியாத நிலையில் காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025