2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கர்ப்பமாக்கும் ‘கர்ப்பிணி கல்’

Mayu   / 2024 மார்ச் 04 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு போர்ச்சுகலில் பெட்ராஸ் பர்டிராஸ் என்ற மர்மமான மலை உள்ளது.

இது ‘பிறக்கும் கற்கள்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று  நீங்கள் ஆச்சரியப்படலாம். உண்மையில், இந்த மலை அதிசயமான முறையில் குழந்தை பாறைகளை பெற்றெடுக்கிறதாம். மலையிலிருந்து சிறு குழந்தை போன்ற பாறைகள் மீண்டும் மீண்டும்  வெளிவருவது போல் தெரிவதாக சொல்லப்படுகிறது.

அதனால்தான் இது ‘அம்மா-பாறை’ என்றும் ‘கர்ப்பிணி கல்’ என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமும், 600 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மலை கிரானைட் கற்களால் ஆனது. இதன் பாறைகள் சுமார் 300 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்றும் கூறப்படுகிறது.

பெரும்பாலும், 2 முதல் 12 சென்டிமீட்டர் தடிமன் கொண்ட பாறைகள் பாறையின் உச்சியில் இருந்து வெளியேறும், இது மலையின் குழந்தை போல் தெரியும்.

நீங்கள் நெருக்கமாகப் பார்த்தால், இந்த மலையானது இந்த சிறிய ஓவல் பாறைக் கட்டிகளால் சூழப்பட்டிருப்பதைக் காணலாம். அதன் வெளிப்புற அடுக்கு பயோடைட்டால் ஆனது,  இது ஒரு வகை மைக்கா ஆகும். மழை அல்லது பனி நீர் அதன் விரிசல்களில் ஊடுருவி, குளிர்காலம் வரும்போது அது முற்றிலும் உறைந்துவிடுகிறது.

பெரிய கிரானைட் ‘அம்மா’ பாறைகள் இந்த ‘குழந்தை’ கற்களை வெளியே தள்ளுவது போல் தெரிகிறது.

இத்தகைய சிறிய பாறைகள் மலையிலிருந்து எப்படி வெளிவருகின்றன என்ற மர்மத்தைக் கண்டறிய விஞ்ஞானிகள் பல பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர்.

உள்ளூர் மக்கள் இந்த பாறைகளை கருவுறுதலின் சின்னமாக கருதுகின்றனர். ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்கள் இருந்தால், தலையணையின் கீழ் அதன் பாறைகளில் ஒன்றை வைத்து தூங்கினால் சிக்கல் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையும் இங்கு வாழும் மக்களிடையே உள்ளது.

உலகின் பல பகுதிகளில் இருந்து பெண்கள் இங்கு வந்து இந்த கல் துண்டுகளை எடுத்துச் செல்வதற்கு இதுவே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கற்கள் திருமணமாண பெண்ணை கர்ப்பமாக இருக்க உதவுகிறதா? இல்லையா? என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆனால் இது நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கருவுற்ற பிறகும், ஏராளமான பெண்கள் இங்கு வந்து பூஜை செய்வதாக கூறப்படுகிறது.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .