Editorial / 2018 நவம்பர் 13 , மு.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பரவிவரும் காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 31ஆக உயர்வடைந்துள்ள அதேநேரத்தில், மேலும் 228 பேரை இன்னமும் காணவில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில் தொடர்ச்சியாக வீறுகொண்டு பரவிவரும் இத்தீ, இதுவரை வீடுகள், வணிக நிலையங்கள் என, 6,700க்கும் மேற்பட்ட சொத்துகளை அழித்துள்ளது. இதுவரை, 111,000 ஏக்கர் நிலப்பகுதிகள் அழிவடைந்துள்ளன.
மறுபக்கமாக தெற்குப் பகுதியில் தொடர்ச்சியாகத் தீ பரவிவரும் நிலையில், குறைந்தது 85,500 ஏக்கர் நிலப்பகுதி அழிவடைந்துள்ளது. சுமார் 180 வீடுகள், வணிக நிலையங்கள் ஆகியனவும் அழிவடைந்துள்ளன.
52 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago