Editorial / 2018 நவம்பர் 20 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டமைக்கு, சவூதி அரேபியாவைத் தண்டிக்குமாறு அதிகரித்துவரும் அழுத்தத்தை எதிர்நோக்குகின்ற போதும், கஷோக்ஜி கொல்லப்பட்ட ஒலிப்பதிவைக் கேட்க விரும்பவில்லை என, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதியின் துணைத் தூதரகத்துக்குள் வைத்து, கடந்த மாதம் இரண்டாம் திகதி கஷோக்ஜி கொல்லப்பட்ட நிலையில், கொலை தொடர்பான ஒலிப்பதிவொன்றை, ஐ.அமெரிக்காவுக்கு, துருக்கி வழங்கியிருந்தது.
எனினும், தான் ஒலிப்பதிவை கேட்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், ஏனெனில் அது துன்பப்படுகின்ற மோசமானதொரு ஒலிநாடா எனவும், ஒலிநாடாவைக் கேட்பதற்கான எந்தக் காரணமும் தனக்கில்லையெனவும், தொலைக்காட்சி நேர்காணலொன்றில் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த ஒலிநாடாவைக் கேட்காமல் அதிலுள்ள அனைத்தும் தனக்குத் தெரியுமென்று தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், “அது மிகவும் வன்முறையானது, மோசமானது” எனக் கூறியுள்ளார். இந்நிலையில், கஷோக்ஜியின் கொலை, இதில் சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் வகிபாகம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்படுகின்ற நிலையில், சவூதியுடன் நெருங்கிய உறவைப் பேண விரும்புவதாக, ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
கஷோக்ஜியின் கொலை தொடர்பில், தான் ஒன்றும் செய்யவில்லை என பின் சல்மான் தனக்குக் கூறினாரெனவும், கொலை தொடர்பில் அவருக்குத் எதுவும் தெரியாதெனப் பலர் கூறினரெனவும், ஜனாதிபதி ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கஷோக்ஜியைக் கொல்ல யார் உத்தரவிட்டது என ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாமல் போகலாமெனவும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
45 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago