2025 மே 15, வியாழக்கிழமை

‘காசாவில் நாள் ஒன்றுக்கு 63 பெண்கள் உயிரிழப்பு’

Editorial   / 2024 மார்ச் 09 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுகிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாலஸ்தீனர்கள் மீது ,  இஸ்ரேல் நடத்தியஎட்டு தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காசாவுக்குள் கூடுதல் உதவிகளை அனுமதிக்க வேண்டும், அப்பாவிகளின் உயிர்களைப் பாதுகாப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .