2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காதல் திருமணத்தால் மகள்களைக் கௌரவக் கொலை செய்த தந்தை

Freelancer   / 2024 ஜூன் 06 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காதல் திருமணம் செய்ததற்காக கௌரவக் கொலையாக இரு மகள்கள் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள விஹாரி லாகூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் இருவர், கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறினர்.

வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் காதலர்களை நீதிமன்றத்தில் ஆஜராகி பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இருப்பினும், கிராம பஞ்சாயத்தில் உள்ள குறித்த பெண்களின் தந்தை, தனது இரண்டு மகள்களையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு திருமணமானவர்களின் குடும்பத்தினரிடம் உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.

அதன்படி, திருமணமான வாலிபர்களின் குடும்பத்தினர் இரு பெண்களையும் தந்தையிடம் ஒப்படைக்க பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.

பின்னர், தந்தை இருவரையும் வீட்டுக்கு வரவழைத்து, மகனுடன் சேர்ந்து அவர்களை துன்புறுத்தி சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பாகிஸ்தானில் கௌரவக் கொலை என்ற பெயரில் ஆண்டுக்கு 1000 பெண்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X