Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 12 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் தாதியாக பணியாற்றி வந்தவர் பெனலோப் வில்லியம்ஸ் (வயது 42). இவர் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருடன் ரகசிய உறவை தொடர்ந்துள்ளார்.
அவருடன், மருத்துவமனையின் பின்புறம் கார்கள் நிறுத்தும் இடத்தில் கார் ஒன்றில் பாலியல் உறவு வைத்துள்ளார். இதில், அந்த நோயாளி உயிரிழந்து விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதுபற்றி பொலிஸார் வில்லியம்சிடம் விசாரணை நடத்தினர்.
அதில், வில்லியம்ஸ் கூறும்போது, அந்த நோயாளி பேஸ்புக் வழியே உடல்நல பாதிப்பென செய்தி அனுப்பினார்.அதன் பின்னரே அவரை பார்க்க சென்றேன். காரின் பின்புறம் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே செலவிட்டேன். நாங்கள் பேசி கொண்டு இருந்தோம் என முதலில் கூறியுள்ளார்.
தொடர்ந்து விசாரணையில், அந்த நோயாளி திடீரென முனங்க தொடங்கினார். பின்னர் உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளார்.
பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு பின்பே, அந்த நபருடன் இருந்த உறவு பற்றி அவர் கூறியுள்ளார். அந்த இரவில் அவர் நோயாளியுடன் பாலியல் உறவில் இருந்து உள்ளார். அந்த நபர், உறவின்போது இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து அதிகாரிகள் சென்றபோது, கீஆடைகள் இன்றி அரை நிர்வாணத்தில் அந்த நபர் கிடந்து உள்ளார். அவரை உடனே ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கொண்டு செல்லவில்லை. அதற்கு பதிலாக சக பணியாளரை அந்த தாதி அழைத்து உள்ளார்.
இந்த நிலையில், தாதி தொழிலுக்கு எதிராக அதன் கண்ணியம் சீர்குலையும் வகையில் நடந்து கொண்டதற்காக வில்லியம்ஸ் பணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
28 minute ago