2025 மே 16, வெள்ளிக்கிழமை

கார் பந்தையத்தில் துப்பாக்கிச்சூடு :10 வீரர்கள் பலி

Ilango Bharathy   / 2023 மே 21 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்றுமுன்தினம்(20)  கார் பந்தையமொன்று  நடைபெற்றது.

இக் கார் பந்தையத்தில் 50க்கு மேற்பட்ட கார் பந்தைய வீரர்கள் பங்கேற்றனர். மேலும், இப் போட்டியைக்  காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.

இந்நிலையில், கார் பந்தையத்தின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வேனில் வந்த மர்மக்  கும்பலொன்றே  கார் பந்தைய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

 இத் துப்பாக்கிச்சூட்டில் கார் பந்தைய வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் தப்பியோடிய கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .