2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கார்களுக்காகப் போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டுவர முடிவு

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 22 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் ‘செல்ஃப் டிரைவிங் கார்”  எனப்படும் ஓட்டுநர் ஸ்டீரிங்கை பிடிக்காமல் தானாக இயங்கும் கார்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக, போக்குவரத்து விதிகளில் மாற்றங்கள் கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் ஒரே லேனில் 59.5 கிலோ  மீற்றர் வேகத்திற்கு கீழ் செல்லும்,  செல்ஃப் டிரைவிங்  காரின் ஸ்டீரிங் வீல் உள்ள இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் திரைப்படம் பார்க்கவும், ஒன்லைன் கேம்கள் விளையாடவும், இணையதளங்களை திறந்து பார்க்கவும் அனுமதி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒருவேளை விபத்து சம்பவித்தாலும்   கூட ஓட்டுநர் மீது வழக்கு பதியப்படமாட்டாது எனவும், சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்நாட்டின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், ‘வீதி சந்திப்புகள்  உள்ளிட்ட  இடங்களில்  ஸ்டீரிங்கை  இயக்க ஓட்டுநர்கள்  தயாராக இருக்க வேண்டுமெனவும், ஸ்டீரிங்கை பிடிக்கும் போது கட்டாயமாகக் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தக்கூடாது‘ என்ற சட்டம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .