2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கால் உண்ட நபரால் பரபரப்பு : காணொளி

Mayu   / 2024 மார்ச் 25 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் விபத்தில் சிக்கியவரின் காலை தனியாக எடுத்துகொண்டு ஊருக்குள் சுற்றி திரிந்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இளைஞர் ஒருவர் மனித காலுடன் சுற்றி திரிந்துள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதியை கடந்துசென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த இளைஞர் மனித காலை மோப்பம் பிடித்ததாகவும் அதை சாப்பிட்டதாகவும் அதனைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் , 27 வயதான ரெசெண்டோ டெல்லெஸ் எனும் இளைஞனை கைது செய்துள்ளனர்.

இதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவருவதாவது:  வாஸ்கோ அம்ட்ராக் ரயில் நிலையத்தில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரின் கால் ரயிலில் சிக்கி பலமாக சேதமடைந்துள்ளது.

அதனை உடலில் இருந்து பிரிந்து குறித்த இளைஞர் எடுத்து வந்து அதனை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X