Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மிர் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்துக்கு தாம் எடுத்துச் செல்லவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
தாம் நிர்வகிக்கும் ஜம்மு காஷ்மிரின் சிறப்பு சுயாட்சியை இந்தியா திரும்பப் பெற்றுள்ள நிலையிலேயே மேற்குறித்த நகர்வை மேற்கொள்ளவுள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
சுயாட்சி திரும்பப் பெற்ற முடிவுக்கு பதிலீடாக வர்த்தக, போக்குவரத்துத் தொடர்புகளை துண்டித்திருந்த பாகிஸ்தான், இந்தியாவின் தூதுவரையும் வெளியேற்றிருந்தது.
காஷ்மிரை இந்தியாவும், பாகிஸ்தானும் முழுமையாக உரிமை கோருகின்றபோதும், பகுதியளவிலேயே இந்தியாவும், பாகிஸ்தானும் பத்தாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் பிரச்சினைக்குள் ஆட்சி செய்கின்றன.
இந்நிலையிலேயே, காஷ்மிர் விடயத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லத் தாங்கள் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தானின் வெளிநாட்டமைச்சர் ஷா மெஹ்மூட் குரேஷி நேற்று முன்தினம் தெரிவித்ததுடன், அனைத்து சட்ட ரீதியான விடயங்களையும் கருத்திற் கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை, முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மிரில் இந்தியா மறுக்கும் இந்தியா புரிந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை மையப்படுத்தியதாகவே வழக்கு இருக்கும் என ஷா மெஹ்மூட் குரேஷி தெரிவித்துள்ளார்.
16 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
35 minute ago