Editorial / 2018 ஜூன் 21 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீன நிலப்பரப்பிலிருந்து தம்மீது நடத்தப்பட்டதென இஸ்ரேல் கூறும் றொக்கெட் தாக்குதல்களைத் தொடர்ந்து, காஸா நிலப்பரப்பிலுள்ள 25 இலக்குகளை இலக்குவைத்து, இஸ்ரேல் போர் விமானங்கள், நேற்று (20) காலையில் தாக்குதல் நடத்தின.
நேற்று முன்தினம் இரவு, காஸாவிலிருந்து சுமார் 45 றொக்கெட்டுகள், இஸ்ரேல் மீது வீசப்பட்டன எனத் தெரிவித்த இராணுவம், அவற்றில் 7 றொக்கெட்டுகள், ஏவுகணைத் தடுப்புத் திட்டத்தால் தடுக்கப்பட்டன எனவும் குறிப்பிட்டது.
இதைத் தொடர்ந்து, ஹமாஸ் இலக்குகள் என இஸ்ரேலால் அடையாளங்காணப்பட்ட இலக்குகள் மீது, இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இதில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகியிருக்கவில்லை. இஸ்ரேலியத் தரப்பும் கூட, ஹமாஸ் குழுவினருக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல்கள், அண்மைக்காலத்தில் அதிகரித்துவரும் நிலையில், காஸாவில் மீண்டுமொரு போர் ஏற்படலாமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஐக்கிய நாடுகளின் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட சர்வதேச அதிகாரிகள் பலர், இது தொடர்பான அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago