2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கிம் ஜாங் உன்னுக்கு பரிசளித்த புதின்

Mithuna   / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவும், வடகொரியாவும் நட்பு நாடுகளாக திகழ்கின்றன. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ரஷ்யா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் ரஷ்ய ஜனாதிபதி புதினை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரஷ்ய ஜனாதிபதி புதின், தான் பயன்படுத்தும் ரஷ்ய தயாரிப்பு சொகுசு காரான அன்ரூஸ் செனட் காரை வடகொரிய ஜனாதிபதியுக்கு காட்டினார். அந்த காரில் வடகொரிய ஜனாதிபதி கிம், பின் இருக்கையில் இருந்து பயணம் செய்தார்.

இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதியுக்கு ரஷ்ய ஜனாதிபதி புதின் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அந்த கார் வடகொரிய ஜனாதிபதியின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பரிசளிக்கப்பட்டுள்ளது. பரிசளிக்கப்பட்ட கார் எந்த வகையானது? எவ்வாறு வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை, கார் பரிசளித்த ரஷ்ய ஜனாதிபதியுக்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன்னின் தங்கை கிம் யொ ஜாங் நன்றி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .