Editorial / 2019 மே 01 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரம் இரத்துச் செய்யப்படுவதாகவும் முதலமைச்சரின் அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் அதிகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதிகமாக தலையீடு செய்வதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் புதுவையைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அரசாங்கத்தின்ன் அன்றாட நடவடிக்கைகளை பரிசீலிக்கும் வகையில் துணைநிலை ஆளுநர்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருந்த சிறப்பு அதிகாரங்களை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி மகாதேவன், “முதலமைச்சரின் அதிகாரத்திலும் அன்றாட அலுவல்களில் தலையிடவும், கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
மேலும், யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பு இரத்துச் செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago