Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 மே 18 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் மூன்று குற்றசாட்டுகள் இன்று கைவிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 20/20 உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்த நிலையில், தனுஷ்கவுக்கு முதல் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், டிண்டர் என்ற சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்து, சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள வீட்டிற்கு சென்ற தனுஷ்க, தனது அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குறித்த பெண் தனுஷ்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.
அதற்கமைய, கடந்த 2022 ஒக்டோபர் 6 ஆம் திகதி அதிகாலை சிட்னியின் ஹையாட் ரீஜென்சி விடுதியில் தனுஷ்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago