Editorial / 2018 ஜூன் 26 , மு.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

குடியேற்றவாசிகளின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக, பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெற்ற கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராயப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகள் காணப்படுகின்ற நிலையில், அந்நாடுகளுள் 16 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்குபற்றிய கூட்டம், நேற்று முன்தினம் (24) இடம்பெற்றது.
குடியேற்றவாசிகள் தொடர்பில், ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் ஏற்கெனவே காணப்படும் இணக்கப்பாடு தொடர்பில் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையிலேயே, இக்கூட்டம் இடம்பெற்றது.
ஆனால், அனைத்து நாடுகளும் இணைந்து, கூட்டான முடிவொன்றை எடுப்பதற்கு, இதன்போது தவறியிருந்தன. இந்நிலையில், பெரும்பான்மையான நாடுகள் எடுத்துள்ள முடிவுகளுக்குப் புறம்பான கொள்கைகளைக் கொண்டிருக்கும் நாடுகளைத் தள்ளிவைத்துவிட்டு, ஏனைய நாடுகள் இணைந்து, இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஜேர்மனியும் பிரான்ஸும், இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
குடியேற்றவாசிகளின் பிரச்சினை, ஐரோப்பாவுக்கு எவ்வளவு முக்கியமானதோ, அதை விட, ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெலுக்கு முக்கியமானது. ஏனெனில், அவரது ஆளும் கூட்டணியிலுள்ள பிரதான தோழமைக் கட்சி, குடியேற்றவாசிகளின் பிரச்சினை தொடர்பாக, மேர்க்கெலுக்கு, காலக்கெடு ஒன்றை வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றில் அகதி அந்தஸ்துக் கோரிய ஒருவர், ஒன்றியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கும் செல்லக்கூடியவாறு தற்போதுள்ள ஏற்பாட்டை மாற்றுவதற்கு, இரண்டு வாரங்களுக்கான காலக்கெடு, கடந்த வாரத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. எனவே, இவ்விடயத்தில் இணக்கப்பாடொன்றைக் காணவேண்டிய கட்டாயத்துக்கு, மேர்க்கெல் தள்ளப்பட்டுள்ளார்.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago