Editorial / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெனிசுவேலாவில் தன்னைத் தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட குவான் குவைடோவின் சட்டசபை சட்டவிலக்களிப்பு நீக்கப்பட வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், பொது அலுவலகமொன்றை சட்டசபையின் சபாநாயகரான குவான் குவைடோ வைத்திருக்க முடியாதென வெனிசுவேலாவின் சட்டமா அதிபர் அலுவலகம் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்த நிலையில், குறித்த அறிவிப்புடன் குவான் குவைடோ மீதான கட்டுப்பாட்டை வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்றம் இறுக்குகின்றது.
எவ்வாறெனினும், பொது அலுவலகத்தை வைத்திருப்பதற்கான தடையை நிராகரித்திருந்த குவான் குவைடோ, அது நீதித்துறையிலிருந்தே வர வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். வெனிசுவேலாவின் சட்டமா அதிபர், அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவால் நியமிக்கப்பட்டவர் ஆவார்.
இந்நிலையில், ஜனாதிபதி மதுரோவுக்கு விசுவாசமானவர்களால் கட்டுப்படுத்தப்படும் உச்ச நீதிமன்றமானது, குவான் குவைடோ விசாரணைக்கு உட்படுத்தப்படும் வகையில் அவரது சட்டவிலக்கை நீக்குமாறு அரசமைப்புச் சமபையிடம் கோரியுள்ளது.
வெனிசுவேலாவுக்கு வெளியே செல்லக் கூடாதென்ற தடையை, ஆர்ஜென்டீனா, பிரேஸில், கொலம்பியா, ஈக்குவடோர், பராகுவேக்கு இவ்ப்வாண்டு பெப்ரவரி இறுதியிலிருந்து கடந்த மாதம் ஆரம்பம் வரை சென்றதன் மூலம் குவான் குவைடோ மீறினார் என உச்ச நீதிமன்றம் மேற்கோள்காட்டியுள்ளது.
வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக 50 நாடுகளால் அங்கிகரிக்கப்படுகின்ற குவான் குவைடோ, ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுடன் அதிகார மோதலில் இருக்கின்றார்.
இந்நிலையில், தொடர்ச்சியானதொரு பயங்கரமான மின்வெட்டை வெனிசுவேலா எதிர்கொண்டுள்ள நிலையில், மில்லியன் கணக்கான மக்கள் தண்ணீரில்லாத நிலையில், இதைத் தீர்க்கும் முகமாக அரசாங்கமானது சக்தி அமைச்சரான ஓய்வுபெற்ற ஜெனரலான லூயிஸ் மோட்டா டொமினிகஸ்ஸை லாகோர் கவிடியா லியோன் மூலம் பிரதியிட்டுள்ளதுடன், மின் பங்கீட்டையும் ஆரம்பித்துள்ளது.
கடந்த மாதத்தில், மூன்று பாரிய மின்வெட்டுக்கள் நிக்ழந்த நிலையில், பணி நாளை அரசாங்கம் குறைத்துள்ளதுடன், பாடசாலைகளையும் மூடியுள்ளது
20 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
1 hours ago