2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கேட் இறந்துவிட்டதாக பரவிய போலி செய்தியால் பரபரப்பு

Freelancer   / 2024 மார்ச் 19 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறப்பது போன்ற புகைப்படம் வெளியானதால் இளவரசி கேட் இறந்துவிட்டதாக விஷமிகள் சிலர் பரபரப்பை ஏற்படுத்தினர்.

அண்மைய நாட்களாக பிரித்தானிய இளவரசி கேட் தொடர்பில் பல சர்ச்சையான கருத்துக்கள் பரவி வந்த நிலையில், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறப்பது போன்ற புகைப்படம் வெளியாகி மேலும் அச்சத்தை ஏற்படுத்தியதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இளவரசர் சார்லஸ், மன்னரானதைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியமுக்கு வேல்ஸ் இளவரசர் பட்டம் வழங்கப்பட்டது.

கேட், வேல்ஸ் இளவரசியாகி பாதுகாப்புப் பிரிவில் பொறுப்பொன்றை வகிக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பாதுகாவலர்களின் அணிவகுப்பு நடந்தபோது அதில் இளவரசி கேட் கலந்துகொள்ளவில்லை. அதேசமயம் இளவரசி அங்கு இல்லாதபோதும், வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததால், இளவரசி கேட் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறந்ததையும் இளவரசி அணிவகுப்பில் கலந்துகொள்ளாததையும் இணைத்து, இளவரசி கேட் இறந்துவிட்டார். அதனால் தான் பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கின்றது என்று சிலர் வதந்திகளை பரவவிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஆய்வுக் குழுவினர் கொடி குறித்த உண்மையை ஆராய்ந்தபோது, அது மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரிய வந்துள்ளது. S

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .