2025 மே 16, வெள்ளிக்கிழமை

கேன்ஸ் திரைப்பட விழாவில் இரத்தத்தால் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 மே 23 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரேனிய தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்த பெண் ஒருவர், உடல் முழுவதும் இரத்தத்தை ஊற்றிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில்  76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பில் உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் விதமாக விழாவின்போது உக்ரேனிய தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து ரெட் கார்ப்பெட்டில் வந்த பெண் ஒருவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த இரத்த நிறத்திலான திரவத்தை உடலில் ஊற்ற ஆரம்பித்தார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவிய நிலையில், காவலாளிகள் உடனடியாக அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .