2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கேரளாவில் உயிரிழந்தோர் எண். 37ஆக உயர்வடைவு

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் சுற்றுலாத்துறைக்குப் பெயர்போன மாநிலமான கேரளாவில், கடந்த வாரம் முழுவதும் பெய்த மழை காரணமாகவும் அதனால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 37ஆக உயர்வடைந்துள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக, 36,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர வேண்டியேற்பட்டுள்ளது.

அதன் அழகு காரணமாக, “கடவுளின் சொந்த நாடு” என அழைக்கப்படும் கேரளாவில், பருவமழை காரணமாகப் பாதிப்புகள் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படுகின்ற போதிலும், இவ்வாண்டு ஏற்பட்ட பாதிப்புகள், மிக அதிகமாக உள்ளன.

கடுமையான பாதிப்புகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டோர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள, 350 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என, மாநிலத்தின் அனர்த்த முகாமைத்துவக் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள அணையின் 5 வான்கதவுகளும், அதன் வரலாற்றில் முதன்முறையாகத் திறந்துவிடப்பட்டுள்ளன. பாரிய வேகத்துடன் தண்ணீர் வெளியேறி  வருவதால், அதனருகே வசிக்கும் குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X