Freelancer / 2024 ஜூன் 20 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலில் விவசாய வேலை செய்து வந்த இந்திய தொழிலாளியின் கை துண்டான நிலையில், அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே லட்டினா என்ற பகுதியில், ஆயிரக்கணக்கான இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கு விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய புலம்பெயர் தொழிலாளர் சத்னம் சிங் (31) என்பவர் வயலில் வேலை செய்து வந்தநிலையில் வைக்கோல் வெட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானதால் அவர் வலியில் அலறித் துடித்துள்ளார்.
இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, அவரை வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் சத்னம் சிங்கை அவரது வீட்டின் அருகே சாலையில் வீசி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து வந்த பொலிஸார், சத்னம் சிங்கை மீட்டு ஏர் அம்புலன்ஸ் மூலம் ரோம் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோதும் சிகிச்சை பலனின்றி சத்னம் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு இத்தாலியில் உள்ள இடது சாரி அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் 'மனித நாகரீகத்தின் தோல்வி” என ஜனநாயக கட்சி விமர்சித்துள்ளது.
இதனிடையே இத்தாலி அரசின் தொழிலாளர் துறை மந்திரி மரினா கால்டரோன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் எனவும், இதில் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேலைக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.S
15 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago