2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொக்கெய்ன் பயன்படுத்தும் இம்ரான்

Ilango Bharathy   / 2023 மே 28 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் பதவியில் இருந்து வெளியேறியதில் இருந்து தற்போதைய ஆட்சியாளர்கள் மற்றும் இராணுவத்திற்கு எதிராக  தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்தார்.

பதிலுக்கு இம்ரான் கான் மீதும் ஆளும் அரசு மற்றும் இராணுவம் கடுமையான குற்றச்சாட்டுகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒன்பதாம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த போது, அவரை துணை இராணுவமான ரேஞ்சர்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனைக்  கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. பின்னர் பாகிஸ்தான் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

 இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் ஊழல் மற்றும் தேசதுரோக குற்றச்சாட்டுகள் அடக்கம்.

இந்நிலையில், பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல் குவாதிர் பல்வேறு பரபரப்பு புகார்களை இம்ரான் கான் மீது அடுக்கியுள்ளார்.

அவர் கூறுகையில், "மே 9ஆம் திகதி இம்ரான் கான் கைது செய்யப்பட்ட போது அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது PIMS மருத்துவமனை அவரது இரத்த மாதிரிகளை பரிசோதித்தனர்.

அதை ஆய்வு செய்து National Accountability Bureau (NAB) முடிவுகளை வெளியிட்டது. அதில், இம்ரான் கான் மது மற்றும் கொக்கெய்ன் போன்ற போதைப்பொருள்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும் அவர் தெளிவான மனநிலையில் இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவரின் செயல்கள் சந்தேகத்தை எழுப்புகின்றன" இவ்வாறு தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .