Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூன் 14 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் கொரிய நூடில்ஸ் விற்பனைக்கு டென்மார்க் தடைவித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல நூடில்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகின் அதிக காரம் சுவை கொண்ட நூடில்ஸை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
உலகம் முழுவதும் இந்த நூடில்ஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரம் மற்றும் சுவை காரணமாக இதற்கு உலகம் முழுவதும் இரசிகர்கள் பரவி கிடக்கிறார்கள்.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அதிக கார சுவை கொண்ட இந்த நூடில்ஸிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க்கின் உணவு கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி அதில் அளவுக்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் உள்ளதாக கூறியுள்ளது.
காப்சைசின் என்பது மிளகாய், மிளகு உள்ளிட்டவற்றில் காரத்தன்மைக்கு வித்திடும் இயற்கையான கூட்டு வேதியியல் கலவையாகும்.
இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள அந்த நூடில்ஸ் பக்கெட்டுகளை உடனடியாக கடைகளில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் அதனை திரும்ப பெறுமாறும் கேட்டு கொண்டுள்ளது.S
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago