2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கார்கள் வேண்டுவதற்கு $30 மில்லியன்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 25 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய கார்களை வாங்குவதற்காக 30 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை பாராளுமன்ற உறுப்பினர்களை உகண்டா கையளித்துள்ளது.

இந்நிலையில், வறிய நாடான உகண்டாவில் கொரோனா பரவல் தாண்டவமாடுகின்ற நிலையில்  இது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாத் தொற்றுக்கள் அதிகரிக்கையில், 529 பாராளுமன்ற உறுப்பினர்களும் தலா 200 மில்லியன் ஷில்லிங்ஸாக 56,500 ஐக்கிய அமெரிக்க டொலர்களை புதிய வாகனங்களைப் பெறுவதற்காக பெறவுள்ளனர்.

ஏற்கெனவே மாதாந்த வருமானமாக 30 மில்லியன் ஷில்லிங்ஸாக 8,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொழிலாளி ஒருவரின் சராசரி மாத வருமானம் 28 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்பதுடன், ஆசிரியர் ஒருவரின் ஊதியமானது 75 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டு இதே போன்ற நகர்வு காரணமாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்து, பாராளுமன்றத்துக்குள் செயற்பாட்டாளர்கள் செல்ல முன்னர் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .