2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொலை செய்தவர்களைக் கைது செய்யுங்கள்: சிராஜுல் ஹக்

Freelancer   / 2022 ஜூன் 29 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அரசியல் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் செயல்பாட்டாளரான அசதுல்லா ஷா மற்றும் அவரது தோழர்களைக் கொன்றவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைவர் சிராஜுல் ஹக் அழைப்பு விடுத்துள்ளார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைமைச் செயலாளர் மற்றும் கைபர் பக்துன்க்வா பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில், ​​வடக்கு வஜிரிஸ்தானின் அல்-கித்மத் அறக்கட்டளை தலைவராக இருந்த ஷா கொல்லப்பட்டமை குறித்து தனது கட்சி அமைதியாக இருக்காது என்று தலைவர் சிராஜுல் ஹக் தெரிவித்துள்ளார் என, டெய்லி ஃபிரான்டியர் ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் ஷாவின் காரை நோக்கி நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஷா மற்றும் தன்னார்வலர் அமைப்பின் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிராலி தெஹ்சிலின் ஹைதர்கெல் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஓடிக்கொண்டிருந்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாவட்ட பொலிஸார் மற்றும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்து அனைத்து தன்னார்வலர்களும் வஜிரிஸ்தான் இளைஞர்கள் என்ற சமூக அமைப்பின் அங்கத்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பு, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்காக பாடுபட்டுள்ளது என்றும் இலக்கு கொலைகளுக்கு எதிராக இந்த அமைப்பு போராட்டம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தையும் நடத்தியுள்ளதாக டான் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், வஜிரிஸ்தான் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் உள்ளிருப்புப் போராட்டத்துக்கு எதிராக பாதுகாப்பு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து, அமைப்பின் தலைவரைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .