Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 ஒக்டோபர் 20 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கொவிட்-19 நோய்த் தொற்றுகள் பற்றி தனது சக ஊழியர்களை எச்சரித்த சீனாவைச் சேர்ந்த கண் மருத்துவரின் மரண நேரத்தில் முரண்பாட்டை காட்டும் அறிக்கையை தி நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
வுஹானைச் சேர்ந்த 34 வயதான டொக்டர் லி வென்லியாங் கொவிட் தொற்று காரணமாக பெப்ரவரி மாதம் மரணமடைந்திருந்தார்.
பெப்ரவரி 7ஆம் திகதி அதிகாலை 2:58 மணிக்கு டொக்டர் லி உயிரிழந்தாக வைத்தியசாலை அறிவித்த போதும் பெப்ரவரி 6ஆம் திகதி மாலை 7:20 மணிக்கு அவர் மாரடைப்புக்கு உள்ளான நேரத்தில் இருந்து சீன ஊடகங்களில் முரண்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளன.
சீன அரச ஊடகமான லைஃப் டைம்ஸ் அவர் இரவு 9:30 மணிக்கு இறந்துவிட்டார் என்று கூறியது, இன்னொரு ஊடகம் பிப்ரவரி 7 அன்று இரவு 10:40 மணிக்கு இறந்தார் என்று கூறியதாக டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
சில ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டதாகவும், பின்னர் அவை நீக்கப்பட்டதாகவும் தி நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
"பெப்ரவரி 6 அன்று இரவு 9 மணியளவில் நான் அவரைப் பார்க்கும் நேரத்தில் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன்," என்று டொக்டர் லியின் சக ஊழியர் நியூயோர்க் டைம்ஸுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டார்.
அறிவிப்புக்காக அவர்கள் நீண்ட காலமாக காலம் கடத்தியதாகவும் வைத்தியசாலை தங்களை மனிதர்களாக நடத்தவில்லை என்பது போல் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவில் ஒரு வீரமான உண்மையைச் சொல்பவராக டொக்டர் லீ பரவலாகக் கருதப்பட்டதுடன்,
வைரஸைப் பற்றி மற்றவர்களை எச்சரிக்க முயன்றதற்காக அவர் அதிகாரிகளால் தண்டிக்கப்பட்டார்.
பின்னர், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் என்றும் சில வாரங்களுக்குப் பின்னர், அவர் வளர்ந்து வரும் தொற்றுநோய்க்கு சீனாவின் மிகவும் பிரபலமான மரணமாக மாறியதாகவும் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி 12 அன்று காய்ச்சல், நுரையீரல் தொற்று மற்றும் பிற அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்குச் சென்ற டொக்டர் லி, மூன்றாம் நாளில், கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகவும் அவருக்கு ஒக்ஸிஜன் ஆதரவு தேவைப்பட்டதாகவும் அவரது மருத்துவப் பதிவுகளை மதிப்பாய்வு செய்த பல வைத்தியர்கள் டைம்ஸிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெப்ரவரி 5ஆம் திகதி அவரின் உடல் நிலை கடுமையாக மோசமடைந்ததாகவும் 6ஆம் திகதிக்கு அவரது பல உறுப்பு செயலிழக்கும் அபாயத்தில் இருப்பதாக மருத்துவர்கள் முன்னேற்றக் குறிப்புகளில் எழுதினர் என்று தெரிவித்த டைம்ஸ், 6ஆம் திகதி இரவு 7:20 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago