2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கோமாவில் இருந்த பெண்ணை குணமாக்கிய ’காமெடி’

Mithuna   / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் அவரால் கோமாவில் இருந்து மீள முடியவில்லை. சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.

அவரை கோமாவில் இருந்து குணமாக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வர அவரது தாய் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். எனினும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜெனிபரின் தாய் வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார். அதை கேட்ட, ஜெனிபர் சிரித்துள்ளார். இதை கவனித்த அவரது தாய் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகன் தனது காமெடியை கேட்டு கோமாவில் இருந்து சற்று மீண்டதை அவரால் நம்பமுடியவில்லை. உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார். இதைத்தொடர்ந்து அவரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X