Mithuna / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. போர் நிறுத்தம் கொண்டு வர கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை முன்மொழிந்தனர்.
முதல் கட்டத்தில் 19 வயதுக்குப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகள், முதியவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் 1500 பலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.
2-வது கட்டத்தில் ஆண் பிணைக்கைதிகளும், 3-ம் கட்டத்தில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தது. அதன் பிறகு நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை. அந்த அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும். நாங்கள் ஒரு முழுமையான வெற்றி பாதையில் இருக்கிறோம்.
காசாவின் எந்தப் பகுதியையும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விடமாட்டோம். காசாவின் நீண்ட காலத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் இஸ்ரேலுக்கு மட்டுமே உள்ளது” என தெரிவித்துள்ளார்.
6 minute ago
15 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
25 minute ago
2 hours ago