2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’’கோவிஷீல்டு பக்கவிளைவு தரலாம்’’: நீதிமன்றில் ஒப்புதல்

Editorial   / 2024 மே 01 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கொவிட் தடுப்பூசியான கோவிஷீல்டு சில நேரங்களில் ஏதேனும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை தரலாம் என இந்த ஊசியை தயாரித்த நிறுவனம் லண்டன்  நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

உலகையே உலுக்கிய கொவிட் தொற்றால் லட்சக்கணக்கானோர் மாண்டனர். உலக பொருளாதாரமே சீர்குலைந்தது. கொவிட்டை தடுக்க தடுப்பு மருந்து வராதா என்ற ஏக்கத்தில் இருந்தபோது கோவாக்ஸின் , கோவிஷீல்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பு மருந்து கட்டாயமாக்கப்பட்டது. 90 சதவீத மக்கள் இந்த ஊசியை போட்டு கொண்டனர். இந்த ஊசியால் உயிருக்கு அச்சுறுத்தல் வருமா என்ற கேள்வி எழுந்த போது, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்தன.
 

ரத்தம் உறைதல்


இந்நிலையில் கோவிஷீல்டு காரணமாக பலர் உடல்நலம் பாதிக்கப்படுவதாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில் , கோவிஷீல்டு தயாரித்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஷ்ட்ராஜெனேகா நிறுவனம் நீதிமன்றத்தில் பாதிப்பு குறித்து ஒப்புக்கொண்டுள்ளது.

'ஏதேனும் ஒரு சிலருக்கு இது போன்ற பாதிப்பு வருவது அரிதான விஷயம் தான். ரத்தத்தில் உறைதல் ஏற்படலாம், டிடிஎஸ் எனப்படும் (Thrombosis with Thrombocytopenia Syndrome )பாதிப்பு வரலாம். இது எல்லோருக்கும் வருவதில்லை, மிக அரிதாக நடக்கலாம்' . இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X