2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சட்ட நகல் பாராளுமன்றில் கிழிக்கப்பட்டது

Mayu   / 2024 நவம்பர் 15 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பியான ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில் கிழித்த சம்பவம் உலகத்தின் கவனத்தை பெற்றுள்ளது.

ஹனா-ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் எனும் 22 வயதான இளம் எம்பி, தனது கன்னி உரையின் போதே மாவோரி மொழியில் பேசியது நியூசிலாந்து மட்டுமல்லாது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக நியூசிலாந்து ஆளும் கூட்டணியில் ஏசிடி கட்சி முன்மொழிவை கொண்டு வந்து வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, வியாழக்கிழமை (14) நியூசிலாந்து பாராளுமன்றத்தில் வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடிகளான மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பி, ஹக்கா எனப்படும் மாவோரிகளின் நடனம் ஆடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X