2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சட்னி சாப்பிட்ட பெண்ணுக்கு துயரம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும்பாலான மக்கள் உணவுடன் சட்னி சாப்பிட விரும்புகிறார்கள். ஒருவகையில் பலர் இதற்கு அடிமையாகி உள்ளனர். ஒவ்வொரு உணவிற்கும் அதற்கு ஏற்ற சட்னி அவசியம் உடன் இருக்க வேண்டும். அதற்காக ரெடிமேட் சட்னி/ சாஸ் வாங்கி சாப்பிடுகிறார்கள். இது தவறில்லை. ஆனால் அதில் கொஞ்சம் கவனம் தேவை இல்லையேல் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பிரேசிலில் வசிக்கும் கார்னிரோ சோப்ரேரா கோஜ் சந்தையில் இருந்து பெஸ்டோ சாஸை வாங்கியுள்ளார். இது நசுக்கிய பூண்டு, ஐரோப்பிய பைன் பருப்புகள், உப்பு, துளசி இலைகள் மற்றும் சீஸ் சேர்த்து செய்யப்படும் சட்னி.

பல நாட்கள் கழித்து சட்னியை கோஜ் திறந்து பார்த்தபோது அதன் நிறமும் தரமும் பார்ப்பதற்கு நன்றாக இருந்ததால் அதை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டவுடன், அவருடைய உடல்நிலை மோசமடைய ஆரம்பித்துள்ளது.

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு போட்யூலிசம் என்ற அரிய தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது பொதுவாக உணவு விஷத்தால் ஏற்படுகிறது. சக்தி வாய்ந்த பக்டீரியாக்கள் உடலின் நரம்புகளைத் தாக்கி, சுவாசிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. தசைகள் தளர்வடைகின்றன. இது பக்கவாதத்தையும் சில சமயங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. கோஜிக்கும் அதேதான் நடந்தது. பெஸ்டோ காலாவதியானதால் அதில் பக்டீரியா பரவியதால் உணவு விஷமாக மாறியுள்ளது என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X