2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சீன ஜனாதிபதியின் கொடூர ஒடுக்குமுறை தீவிரம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன ஜனாதிபதி ஜிங்பிங் தனது பரவலான மற்றும் கொடூர ஒடுக்குமுறையை சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான  வழியிலுள்ள எவர்மீதும், எதன்மீதும் பிரயோகித்து வருகிறார் என நியூயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஹொங்கொங் மற்றும் மெக்கொ மாநிலங்களுக்கு சொத்து பறிமுதல் விசா மறுப்பு மற்றும் நாடு கடத்தல் அதிகாரங்களை இம்மாதம் பீஜிங் வழங்குகிறது.

ஜிங்பிங்கின் இனப்படுகொலை, மனித உரிமை மீறல் என்பவற்றுக்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் விதிக்கும் தடைக்கு பதிலாக இந்த நடவடிக்கை அமைகிறது என்றும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைடன் நிர்வாகம் சீனாவின் பாதுகாப்பு சட்டம் ஆபத்தானது என்பதால் ஹொங்கொங்கில் வர்த்தகம் செய்யும் அமெரிக்கர்களை எச்சரித்திருந்தது.

இதேவேளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஹொங்கொங்கில் ஒருவருக்கு ஒன்பது வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது என அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .