Editorial / 2025 டிசெம்பர் 28 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ‘மேக்னெடிக் லெவிடேஷன்' எனப்படும் காந்தப்புல தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்தினர். இதில் வெறும் 2 விநாடிகளில் அந்த ரயில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்தது.
400 மீட்டர் (1,310 அடி) நீளமுள்ள காந்தப்புல ரயில் பாதையில் இந்த சோதனை நடத்தப்பட்டது, மேலும் 700 கி.மீ. வேகத்தை அடைந்த பிறகு ரயில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இதன் மூலம் இதுவரை உருவாக்கப்பட்ட காந்தப்புல ரயில்களில் அதிக வேகம் கொண்ட ரயில் என்ற பெருமையை இது பெற்றது.
இந்த ரயில், தண்டவாளங்களைத் தொடாமல், அதன் மேலே காந்த விசையில் செல்லக்கூடியது. இதன் முடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு ராக்கெட்டை ஏவும் அளவு சக்தி வாய்ந்தது. இந்த வேகத்தில் நீண்ட தொலைவில் உள்ள நகரங்களை சில நிமிடங்களில் இந்த ரயில்கள் மூலம் நாம் இணைக்க முடியும்.
இந்த சாதனையை படைத்த ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறது.
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago