Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மிர் விவகாரத்தில் சமரசம் செய்யுமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமக்கு வேண்டுகோள் விடுத்தததாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அந்தக் கருத்துக்கு, இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று (22) வெள்ளை மாளிகையில், ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்தித்துப் பேசியிருந்தார்.
இரு நாட்டு உறவுகள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும் பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தினார் எனத் தெரியவருகின்றது.
மேலும், காஷ்மிர் பற்றி தான் கேள்விப்பட்டுள்ளதாகவும் அழகான அந்த இடம், தற்போது யுத்த களமாகியுள்ளதாக கூறியுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அங்கு அமைதி திரும்ப, தான் உதவத் தயார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு தன்னை சந்தித்த பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் சமரசம் செய்யுமாறு தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
எனினும், ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதற்கு, இந்திய வெளியுறவு அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது. இது போன்ற கோரிக்கையை, மோடி முன்வைக்கவில்லை என்றும் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை, காஷ்மிர் விவகாரத்தில் 3ஆவது நபரின் தலையீட்டை அனுமதிப்பதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சின் செய்தியாளர் ரவீஸ்குமார், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலமே, இந்த விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று கூறியுள்ள ரவீஸ்குமார், எல்லை தாண்டிய தீவிரவாதத்தை, பாகிஸ்தான் நிறுத்துவதே, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் பதிவிட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago