Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜூன் 15 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளவில் இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் , கூகுள் தேடல் அல்லது வாட்ஸ் ஆப் வாயிலாக செய்திகளை அறிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்து வருவதாக ரொய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரொய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டெடி ஆஃப் ஜர்னலிசம், அமெரிக்கா உள்ளிட்ட 46 நாடுகளில் சுமார் 94,000 பேரிடம் ஒன்லைன் (நிகழ்நிலை) முறையில் கருத்துக்கணிப்பை நடத்தியது. இது தொடர்பாக தனது வருடாந்திர டிஜிட்டல் செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது
உலகளவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் இணையதளம் அல்லது செயலி மூலம் செய்திகளை படிப்போர் எண்ணிக்கை 10 புள்ளிகள் குறைந்துள்ளது. பார்வையாளர்கள் , டிக்டாக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலை தளங்களில் பத்திரிகையாளர்களை விட பிரபலங்கள், சமூகவலைதள பிரபலங்களை பின்பற்றுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
18 முதல் 24 வயதுடையவர்களில், 20 சதவீதம் பேர் செய்திகளுக்காக டிக்டாக் பொன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5 சதவீத புள்ளிகள் அதிகம்.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் குறைவானவர்களே செய்திகளில் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தினர். 2017ல் 10ல் இருந்து தற்போது 6 பேராக குறைந்துள்ளனர். செய்திகளை ஒளிபரப்பு செய்வது, அச்சிடுவது ஒருபுறம் இருக்க, அவர்கள் வயதாகிறார்கள் என்பதற்காக 2000ம் ஆண்டில் பிறந்தவர்கள், திடீரென பழைய பாணியிலான வலைத்தளங்களை விரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
13 Jul 2025
13 Jul 2025
13 Jul 2025