Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து நாட்டின் இம்மிங்ஹாம் துறைமுகம் நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சென்ற கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெரிட்டி என்ற பெயருடைய இந்த கப்பல் சுமார் 300 அடி நீளமுடையது ஆகும். ஜெர்மனிக்கு சொந்தமான ஹெல்கோலாண்ட் தீவு அருகே சென்றபோது எதிரே மற்றொரு கப்பலும் வந்ததுள்ளது. இந்தநிலையில் ஸ்பெயின் நோக்கி சென்ற குறித்த கப்பல் ஜெர்மனி கப்பல் மீது மோதியது.
இதனையடுத்து கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் விபத்தில் ஜெர்மனியின் கப்பல் சேதம் அடைந்து கடலில் மூழ்கியுள்ளது.
இதில் கப்பலில் இருந்த பலர் மாயமானதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago
13 May 2025