Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானிலுள்ள மத்தியநகரமான றஹிம் யார் கானுக்கு 35 கிலோ மீற்றர் தெற்காகவுள்ள வல்ஹார் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலொன்றும், சரக்கு ரயிலொன்றும் இன்று (11) மோதியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், 71 பேர் காயமடைந்ததாக பொலிஸ் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஹவல்பூரிலிருந்து குவாட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலானது, நேற்றுக் காலை 7.40க்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலொன்றுடன் மோதியதாக ஊடங்கங்களுடன் பேச அனுமதியில்லாதத்தால் தன்னை அடையாளம் காட்ட விரும்பாத உள்ளூர் பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரயில் நிலையத்தில், தவறான பாதையில் திருப்பப்பட்ட பயணிகள் ரயிலானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உமர் சலாமட் உள்ளூர் ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்கும், மேலும் மேம்பட்ட றஹிம் யார் கானிலுள்ள இடமொன்றுக்கும் காயமடைந்தோர் கொண்டு செல்லப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க வைத்தியசாலைக்கு இறந்த 14 பேரின் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு காயமடைந்த 66 பேருக்கு சிகிச்சையளிக்கப்படுவ்தாக வைத்தியசாலை சிரேஷ்ட அதிகாரி லியாகுவாட் சோஹன் கூறியுள்ளார்.
இதேவேளை, றஹிம் யார் கானிலுள்ள ஷெய்க் ஸயெட் வைத்தியசாலைக்கு இறந்ததொருவரின் சடலம் கொண்டு செல்லப்பட்டதுடன், காயமடைந்த ஐவர் சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலை அதிகாரி இல்யாஸ் அஹ்மர் தெரிவித்துள்ளார்
52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago