2025 மே 15, வியாழக்கிழமை

சிகிச்சைக்கு பின் போப் பிரான்சிஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

Janu   / 2023 ஜூன் 19 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடல் அடைப்புகளாலும் வலியாலும் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் திகதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது.

இந்த அறுவை சிகிச்சைக்கு பின் வேகமாக குணம் அடைந்த அவர் கடந்த 16-ந் திகதி வைத்தியசாலையில் இருந்து வத்திக்கான் திரும்பினார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தனது வழக்கமான ஞாயிறு உரையை நிகழ்த்தினார். இதில் கலந்து கொண்ட ஏராளமானோர், போப் ஆண்டவரை கைதட்டி வாழ்த்தினர்.

போப் ஆண்டவர் தனது உரையில் கிரீஸ் நாட்டு கடற்பகுதியில் சமீபத்தில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தமை குறிப்பிடதக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .