Freelancer / 2023 செப்டெம்பர் 13 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் நாளை(14)வியாழக்கிழை பதவியேற்கவுள்ளார். சிங்கப்பூரின் 8-ஆவது ஜனாதிபதியும், முதல் பெண் ஜனாதிபதி ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடா்ந்து, அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 1-ஆம் திகதி நடைபெற்றது.
இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது ஜனாதிபதியாக தா்மன் சண்முகரத்னம் நாளை பொறுப்பேற்கவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

34 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
50 minute ago